பக்கம்:நம் நேரு.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

47


தார். அங்நிலையிலும் அவர் வைஸிராய்க்கு ஒரு கடிதம் எழுதினர். ராஜப்பிரதிநிதி புதிய ரெளலட்பில்களுக்குத்தன் ஆமோதிப்பை அளித்து, அதைச் சட்டமாக்க வேண்டா மென்று காந்திஜீ கெஞ்சிக் கேட்டிருந்தார். வைரோய் வேண்டுகோளைப் புறக்கணித்து விடவே, காந்திஜீ அகில இந்திய போராட்டம் ஒன்றைத் துவக்கித் தலைமை வகித்து நடத்த உறுதி கொண்டார்.

சத்தியாக்கிரக சபை ஒன்றை நிறுவினார் காந்தி. ரெளலட் சட்டத்தையும் மேற்கொண்டு பிறப்பிக்கப்படக் கூடிய சகல சட்டங்களையும் மீறுவது, ஜெயில் - வாசத்தை வலிய ஏற்பது என்கிற வைராக்கியம் பூண வேண்டும் அச்சபையின் அங்கத்தினர்கள்.

இந்தச் செய்தியைப் பத்திரிகைகளின் மூலம் அறிந்த ஜவஹர்லால் நேரு களிபேருவகை எய்தினார். நாட்டில் நிலவிய தேக்கநிலை மாற ஒரு வழி பிறந்துவிட்டது, அது நேரடியாக எதிர்க்கும் போராட்டமாகவும் இருந்தது. ஆகவே, சத்தியாக்கிரக சபையில் உடனடியாகச் சேர்ந்து விடுவது என்று உற்சாகத்தோடு தீர்மானித்தார் நேரு. அவருடைய உற்சாகத்தியிலே பச்சைத் தண்ணீர் கொட்டப்படும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை!

மோதிலால் நேரு இப்புதிய திட்டத்தை ஆர்வமுடன் வரவேற்க வில்லை. புதிய யோசனை எதையுமே அவர் சந்தேகக் கண்ணோடுதான் நோக்கினர். தீரயோசித்து முடிவுகாணும் பண்புடைய தந்தை சத்தியாக்கிரக சபையைப் பற்றிச் சிந்திக்கச் சிந்திக்க அதன்மீது விருப்பமின்மையே உண்டாயிற்று அவருக்கு. தனது செல்வ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/50&oldid=1367028" இலிருந்து மீள்விக்கப்பட்டது