பக்கம்:நம் நேரு.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

நம் நேரு




அந்த இரண்டு வாரத்திலும் நேருவுக்கு வேறு அலுவல்கள் இல்லேயாகையால், அவர் கிஸான் இயக்கத்தில் ஆர்வம் காட்டுவதற்குரிய வாய்ப்புக் கிட்டியது.

அலகாபாத்திலுள்ள பிரபல அரசியல்வாதிகளின் கவனத்தைக் கவர்ந்து, தங்கள் குறைகளை அவர்களிடம் முறையிட்டு ஆதரவு பெறும் நோக்கத்தோடு, சுமார் இருநூறு குடியானவர்கள் பர்தாப்கர் ஜில்லாவைச் சேர்ந்த ஊர்களிலிருந்து கிளம்பி ஐம்பது மைல் தூரம் நடந்து நகரை வந்தடைந்தார்கள். ராமச்சந்திரன் என்பவர் தலைமை தாங்கி தனிப்பட்ட முறையில், அரசியல் தலைவர்களின் தொடர்போ ஆதரவோ இல்லாமல், கிஸான் இயக்கத்தைக் கொஞ்ச காலம் நடத்தி வந்தார்.

அலகாபாத்துக்கு நடந்து வந்த விவசாயிகளை நேரு சக்தித்து அவர்கள் துயரங்களைப் பற்றி விசாரித்தார். அவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி, நேருவும் கிராமங்களுக்கு விஜயம் செய்தனர், ரயில்வேத் தொடர்போ, ரஸ்தாப் போக்கு வரத்தோ இல்லாத பல இடங்களிலும் அலைந்து திரிந்து மக்களின் அன்றாட வாழ்க்கையையும் அவதிகளையும் கண்ணாறக் கண்டார்கள். குடியானவர்களின் ஆர்வமும் துடிப்பும் நேருவுக்கு ஊக்கமளித்தன. ஊர் தோறும் திரள் திரளாக மக்கள் கூடினர். அன்பைச் சொரிந்தனர். நம்பிக்கையோடு தலைவர்கள் முகத்தையே பார்த்து அவர்கள் சொற்களைக் கேட்டு, நன்றியும் காட்டினர்.

கிராமவாசிகளின் துயர வாழ்வும், அவர்கள் காட்டிய அன்பு உணர்வும் நேருவின் உள்ளத்தில் ஆழமாகப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/55&oldid=1367253" இலிருந்து மீள்விக்கப்பட்டது