பக்கம்:நம் நேரு.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

நம் நேரு



சிறிய கார் ஒன்றிலே தான் அவர்கள் சுற்றினர்கள். சரியான ரஸ்தாக்கள் இல்லாத இடங்களிலே குடியானவர்களோடு இரவோடு இரவாக, தற்காலிகமான பாட்டைகளை அமைத்தார்கள். அடிக்கடி கார் மண்ணில் பதிந்துவிடும். அப்போதெல்லாம் கிராமவாசிகள் உற்சாகமாகத் தோள் கொடுத்துக் காரைத் தூக்கி முன்னால் கொண்டு போய் விட்டு விடுவார்கள். நேருவின் கோஷ்டி சென்ற இடங்களுக்கெல்லாம் நிழல் போல் போலீஸாரும் தொடர்ந்தனர். தலைவர்களின் வேகமும் ஓயாத சுற்றுப் பிரயாணமும் போலீஸின் திறமையைப் பரீட்ஷிக்கும் பெரிய சோதனைகளாகந்தான் விளங்கின.

அது கடுங்கோடைப் பருவம். வெயில் சுட்டெரித்தது. கண்களைக் கூசச் செய்தது. வெயிலில் வெளி இடங்களில் சுற்றிப் பழகியவர் அல்லர் நேரு. இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்த பிறகு ஒவ்வொரு கோடை காலத்தையும் சுகவாச ஸ்தலங்களிலேயே அவர் கழித்து வந்தார். இப்போதோ உணர்ச்சிப் பெருக்கோடு அவர் தலைவிலே தொப்பிகூட இல்லாமல், சாதாரணத் துண்டைச் சுற்றிக் கொண்டு, திறந்த வெளிகளிலே, எரிக்கும் சூரிய உஷ்ணத்தை ஏற்றுக் கொண்டு திரிந்தார். சூடோ குளிரோ தன் உடல் எவ்வகையிலும் பாதிக்கவில்லை என உணர்ந்து பெருமிதம் அடைந்தார்.

நேருவிடம் இயல்பாகக் குடிகொண்டிருந்த கூச்சத்தைக் குடியானவர்கள் போக்கடித்து விட்டார்கள். பொதுக் கூட்டங்களில் பேசுவதற்குப் பயிற்சி அளித்தவர்கள் அவர்கள் தான். நேரு, அவர்களிடம் பேசாமல் தீராது. பேசியே ஆக வேண்டிய நெருக்கடிகள் ஏற்பட-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/57&oldid=1367271" இலிருந்து மீள்விக்கப்பட்டது