பக்கம்:நம் நேரு.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை வரலாறு

55


வும் அவர் ஹிந்துஸ்தானியில் தான் தனது எண்ணங்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியிருந்தது. மேடைப் பிரசங்க பாணிகள் எல்லாம் அவர்களுக்குத் தேவையுமில்லே; புரியவும் புரியா. ஆகவே மனிதனுக்கு மனிதன் பரஸ்பரம் மனம் விட்டுப் பேசுவதுபோல, நேரு அவர்கள் மத்தியிலே தன் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களை எடுத்துச் சொன்னார். நல்ல பேச்சாளராக வளர்ந்துவிட்டார்.

பிறகு அடிக்கடி நேரு கிராமப் புறங்களிலே பணிபுரிவதில் ஆர்வம் காட்டினர். காங்கிரஸ் தொண்டர்களும் தங்கள் லட்சிய கோஷங்களை கிராமங்கள் தோறும் ஒலிக்கச் செய்தார்கள். விவசாயிகளும் உரிமைக் கிளர்ச்சிகளில் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டார்கள். அஹிம்சை என்கிற லட்சியத்தை மறந்து விட்டு அவர்கள் அவ்வப்போது பலாத்கார முறைகளில் ஈடுபட்டு விடுவதும், அதன் விளைவுகளை அனுபவித்தும் சகஜமாகிவிட்டது.

கால ஓட்டத்திலே சம்பவங்கள் வேகமாகத் தோன்றத் தொடங்கின. அரசியல் போராட்டம் வலுப்பெற்று வளர்ந்தது. காந்திஜீ ‘ஒத்துழையாமை’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார். மோதிலால் நேரு தமது தொழிலை உதறிவிட்டு எளிமை வாழ்வை ஏற்பது பற்றித் தீவிரமாகச் சிந்தித்துவந்தார். ஐரோப்பிய உடை நாகரிகம் காங்கிரஸ் வட்டாரத்திலே செல்வாக்கு இழந்து, கதராடை மேன்மையுறத் தொடங்கியது. காங்கிரஸின் கொள்கைகளும் அரசியல் நோக்கமும் புதிய கதியில் திரும்பின. அபிப்பிராய பேதம் கொண்ட தலைவர்கள் பலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/58&oldid=1356769" இலிருந்து மீள்விக்கப்பட்டது