பக்கம்:நம் நேரு.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை


இந்திய மக்களின் அன்மையும் நம்பிக்கையையும் பெற்றுள்ள ஒரு சில தலைவர்களுள் ஜவஹர்லால் நேருவும் ஒருவர். உலக நாடுகளின் போற்றுதலையும், எங்குமுள்ள அரசியல்வாதிகள், அறிஞர்கள் முதலானோரின் மதிப்பையும் பெற்று விளங்குபவர் அவர். இந்திய நாட்டின் சரித்திரத்தை மாற்றி அமைக்கப் போராடிய வீரத்தியாகிகளில் ஒருவர் அவர்.


ஜவஹரின் சரித்திரம் இந்திய விடுதலேப் போராட்டத்தின் வரலாறு என்றே சொல்லலாம். நேரு தனது வாழ்க்கையை சுதந்திரத்திற்கும், காங்கிரஸின் வளர்ச்சிக்கும் அரிப்பணித்து, அவற்றிலேயே இன்பமும் சிறப்பும் கண்டார். ஆகவே, நேருவின் வரலாறு நீண்ட காவியமாகும். நேருவின் வாழ்க்கைச் சரித்திரத்தில் காணப்படும் மிக முக்கியமான நிகழ்ச்சிகளையும், அவரது சிறப்புகளைச் சுட்டிக் காட்டக் கூடிய சுவையான விஷயங்களையும் மட்டுமே இச் சிறு புத்தகத்தில் சேர்த்திருக்கிறேன். தொடர்பு குன்றாத வகையில் இந்திய வகையில் இந்திய விடுதலைப் போராட்ட வரலாறும் குறிப்பிடப்பட்டுள்ளது இதில்.


“எனது மன வளர்ச்சியை ஒருவாறு வரைந்து காட்டும் முயற்சி தான் இது. இன்றைய இந்தியாவின் சரித்திரத்தை எழுதும் நோக்கம் எனக்கு இல்லே, என்றாலும் இந்திய சரித்திரத்தை மேல் நோக்காக ஆராயும் ஒரு முயற்சி போல் இது தோன்றலாம்” என்று நேரு தனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/6&oldid=1361233" இலிருந்து மீள்விக்கப்பட்டது