பக்கம்:நம் நேரு.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

நம் நேரு


களைக் கையண்டுவிட்டார். இதைக் காரணமாகக் காட்டி, காந்திஜீ திடிரென்று போரட்டத்தை நிறுத்திவிட்டார்.


இச்செய்தி எல்லோருக்குமே அதிர்ச்சி கொடுத்தது. தலைவர்கள் கோபம் கொண்டனர். நேருவுக்கு காந்திஜீ மீது கோபமும், அவர் கொள்கைகளில் பெருந் தவறு இருக்கிறது.


அரசாங்கம் நிம்மதியடைந்தது. ஒரு சிலவாரங்களிலே காந்திஜீயைக் கைது செய்து நீண்ட காலச் சிறைத் தண்டனை அளித்து மகிழ்ந்தது.

அக்காலத்தில் தான் மோதிலால் நேருவும் சிறைவாச அனுபவம் பெற நேர்ந்தது. தந்தைக்கும் மகனுக்கும் ஆறுமாத சிறைவாசம் விதிக்கப்பட்டது.

ஆனால், மூன்று மாதம் முடிந்ததும் ஜவஹர் விடுதலை செய்ப்பட்டார். அலகாபாத்திற்குத் திரும்பிய நேரு காங்கிர ஸ்தாபனம் சரியாகச் செயல் புரியாமல் தூங்கி வழிந்ததைக் கண்டு வருந்தினார். தான் தீவிரமாக ஏதாவது செயல் புரிய வேண்டும் எனத் துணிந்து. சுதேசித் துணி பகிஷ்காரத்தில் ஈடுபட்டார். ஆறு வாரங்களுக்குள் அரசாங்கம். அவரை மறுபடியும் கைது செய்து சிறைத் தண்டனை கொடுத்து விட்டது.


நேரு லஷ்மணபுரி ஜில்லாச் சிறையில் அடைக்கப் பட்டிருந்தார்.


1923 ஜனவரியில் அரசாங்கம் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்த போது நேருவும் வெளியே வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/61&oldid=1376979" இலிருந்து மீள்விக்கப்பட்டது