பக்கம்:நம் நேரு.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

59



அத்தியாயம் 6

ஜவஹர்லால் நேரு மீண்டும் தேசியப் பணியில் மும்மரமாக ஈடுபட்டார். காங்கிரஸில் செல்வாக்குப் பெற்றவர்கள் நகரசபைகளில் முக்கிய பங்கு பெற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட காலம் அது. ஆகவே நேரு அலகாபாத் முனிசிபல் தலைவர் ஆனார்

நேருவுக்கு நாட்டில் இருந்த மதிப்பையும், அவருடைய ஆற்றலையும் உணர்ந்த ஆங்கிலேயர் அவர் திறமைகளைப் பயன்படுத்திக் கொள்ள ஆசைபடுவது போல் காட்டி, திசை திருப்பிவிட அவாவினர். அவர் விரும்பினால் நேருவுக்குக் கல்வி மந்திரி பதவி கிடைக்கும், அதன் மூலம் சமுதாயத்தைச் சீர்திருத்த நல்ல சந்தர்ப்பங்கள் கிட்டும் என்று கூறிச் சில ஆங்கிலேயர்கள் மறைமுக முயற்சிகள் புரிந்தனர். ஆயினும் அவர்களது ‘பச்சாப் பலிக்கவில்லை’.

காங்கிரஸில் பிரிவு ஏற்பட்டிருந்தது. தேசபந்து தாசும், மோதிலாலும் சுயராஜ்யக் கட்சியை ஆரம்பித்து சேவை செய்து வந்தனர். நேருவுக்குக் காந்தியின் தலைமையில் நம்பிக்கை இருந்தது. ஆனாலும் அவருடைய திட்டங்களில் சில குறைபாடுகள் உள்ளன என்பதை அவருடைய ஆராய்ச்சி உள்ளம் சுட்டிக்காட்டி வந்தது. காந்திஜீயின் ஆலோசனைகளையோ தெளிவான விளக்கவுரைகளையோ பெறுவதற்கு வாய்ப்பு இல்லாத வகையிலே அவர் சிறையில் அடைபட்டுக் கிடந்தார்.

1923-ம் வருஷம் நம் ருேவுக்கு விசித்திரமானதும் எதிர்பாராததுமான ஓர் அனுபவம் ஏற்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/62&oldid=1376978" இலிருந்து மீள்விக்கப்பட்டது