பக்கம்:நம் நேரு.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

63



நாடா ஜெயிலில் சுகாதாரக் குறைவான அறையில் அவர்களை அடைத்து வைத்தார்கள். ஈரம்பிடித்த சின்னஞ்சிறு அறை அது. உயரமும் மிகக்குறைவு. தரையில் தான் அவர்கள் படுத்து உறங்கவேண்டும். பாதி ராத்தியில் பதறி எழவேண்டிய அவசியமும் நேர்ந்து விடுமாம்" ஆராய்ந்தால். எலியோ. சுண்டெலியோதான் முகத்தின் மீது ஏறிவிளையாடியிருக்கிறது என்று புரியுமாம்.

இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு மூவரும் விசாரணைக்குக் கொண்டு போகப்பட்டனர். கல்வி ஞானமே அற்ற ஒருவர் நீதிபதியாக இருந்தாராம். வழக்கு அநேக நாட்களுக்கு நீண்டது. திடீரென்று ஒரு மாற்றமும் பெற்றதாம். வேறொரு இடத்தில் வேறொருவர் முன்னிலையில் சதிக்குற்றத்துக்காக விசாரணை நடைபெற்றதாம். பொய்வழக்கு ஜோடித்து. அதையும் தங்கள் இஷ்டம்போல் வளர்த்து, விசாரணை நாடகம் ஆடிக்கொண்டிருந்தார்கள் சமஸ்தான நிர்வாகிகள்.

நீதியின் பெயரால் நடந்த கேலிக்கூத்து இரண்டு வார காலம் நீடித்த பிறகு, நேருவுக்கும் அவர் நண்பர்களுக்கும், இரண்டு குற்றங்களுக்குமாக இரண்டு அல்லது இரண்டரை வருஷச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

நேரு கைதான செய்திமட்டும் தான்சமஸ்தானத்தை விட்டு வெளியே சென்று பரவியிருந்தது. விசாரணை விவரங்களோ பிறவோ பத்திரிகைகளை எட்டவில்லை. சமஸ்தானங்களின் தர்பாரை ஓரளவு உணர்ந்திருந்த மோதிலால் வைஸிராய்க்குத் தந்தி கொடுத்தார். ஜவஹரைக் காண அனுமதி கோரினர். முதலில்அவருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/66&oldid=1367313" இலிருந்து மீள்விக்கப்பட்டது