பக்கம்:நம் நேரு.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

சுயசரிதையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அவ் வர்த்தைகள் இந்த வரலாற்றுக்கும் பொருந்தும். ஆனால் ”நம் நேரு” ஜவஹரின் ‘மன வளர்ச்சி’யை மட்டுமே குறிக்கும் புத்தகம் அல்ல. சம்பவங்களை மாத்திரம் எடுத்சொல்லும் வறண்ட பாடப் புத்தகமும் அல்ல. ‘எல்லோரும் படித்து ரசிக்கக் கூடிய வரலாற்று நூல். அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இதில் எவ்வளவோ உள்ளன’ என்பதை ரசிகர்கள் உணர முடியும்.


சுதந்திர இந்தியாவின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் உருவாக்கி வருகின்ற நம் நேருவின் சென்ற கால வாழ்க்கையை அறிந்து கொள்ள இப்புத்தகம் மிகுதியும் துணே புரியும். இத்தகைய பயனுள்ள பணியை எனக்கு அளித்து, நம் தலைவர் நேருவின் வரலாற்றை எழுதுவதற்கு ஒரு வாய்ப்பு அமைத்துக் கொடுத்த கலா மன்றத்தாருக்கு எனது இதயபூர்வமான நன்றி உரியது.


சென்னை

வல்லிக்கண்ணன்.

8, பிப்ரவரி, 1954

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/7&oldid=1361243" இலிருந்து மீள்விக்கப்பட்டது