பக்கம்:நம் நேரு.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

நம் நேரு



மிஞ்சிப் போனால் அங்கு ஆறு அல்லது ஏழு மாதங்கள் தான் தங்க நேரிடும் என்று நேரு எண்ணினார். ஆனால் அவரும் அவர் குடும்பத்தினரும் இந்தியா திரும்புவதற்குள் ஒரு வருஷம் ஒன்பது மாதங்கள் கழிந்துவிட்டன. பெரும் பங்கு காலத்தை அவர்கள் ஜினீவா, ஸ்விட்ஸர்லாந்து, மான்டனா மலையிலுள்ள சுகவாச ஸ்தலம் ஆகிய இடங்களிலேயே கழித்தனர். பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளிலும் சிறிது சுற்றி மகிழ்ந்தார்கள்.

ஐரோப்பாவில் தங்கியிருந்த காலத்தில் நேரு பழைய பயங்கரவாதிகளையும், மாஜி தேசபக்தர்களையும். அரசியல் துறவிகளையும் சந்தித்துப் பேசிப் பழக வாய்ப்புக்கள் கிட்டின. இந்தியப் பிரச்னைகளை தூரத்திலிருந்து ஆராய்ந்தார் நேரு. இந்திய தேசீயத் தலைவர்களிடையே மனவேற்றுமைகளும் கொள்கைப் பிணக்குகளும் ஏற்பட்டு வளர்ந்ததுடன், மதவெறி சில தலைவர்களைப் பற்றிக் கொண்டு ஆட்டி வைத்ததையும் அறிந்து நேரு கவலையுற்றார். 1926-ல் சுவாமி சிரத்தானந்தர் எனும் மாவீரர் படுத்த படுக்கையாகக் கிடந்த போது மதவெறியன் ஒருவனால் கொலை செய்யப்பட்டார் என்ற சேதி அவரைத் திடுக்கிடச் செய்தது. கூர்க்கரின் துப்பாக்கிச் சனியன்களுக்கும் குண்டுகளுக்கும் நேராக மார்பைத் திறந்து காட்டிக் கொண்டு போராடி முன்னேறிய வீரருக்குக் கிடைத்த துர்ப்பாக்கியச் சாவு நேருவின் உள்ளத்தைக் கலக்கியது. இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திப் பிரசாரம் செய்து வந்வருக்கு இதுதானா பரிசு என்று மனம் குமைந்தார் அவர், சுவாமி சிரத்தானந்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/73&oldid=1368242" இலிருந்து மீள்விக்கப்பட்டது