பக்கம்:நம் நேரு.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

நம் நேரு


ரையே காரியதரிசியாகக் கொள்ள அவாவினர். வருஷத்திற்கொரு முறை தலைவர் மாற்றம் ஏற்படும் வழக்கம் இருந்தது. ஆனாலும் நேருஜீ தான் காரியதரிசி என்ற நியதி நீடித்து விட்டது.

நாட்டின் அரசியல் களத்திலும், நேருவின் வாழ்விலும் 1928 முக்கியச் சம்பவங்களுக்கு இடமளித்த வருஷமாகத் தான் விளங்கியது. தொழிலாளர்கள், விவசாயிகள், மத்தியதர வகுப்பு இளைஞர்கள், படித்தவர்கள் ஆகிய பலவர்க்கத்தினரும் புது விழிப்புப் பெற்றிருந்தார்கள். தொழிற் சங்கங்கள் பல மடைந்து வந்தன. குடியானவர்கள் பல இடங்களில் கிளர்ச்சி செய்து வந்தார்கள். வல்லப்பாய் பட்டேலின் தலைமையில் நிகழ்ந்த ‘பர்டோலி சத்தியாக்கிரகம்’ மகத்தான வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு வந்திருந்த சைமன் கமிஷனை பகிஷ்கரிக்கும் திட்டம் அமுலுக்கு வந்தது. அதனால் தடியடி தர்பார் தாண்டவமிட்டது.

‘சைமனே, திரும்பிப்போ!' என்று கூறி, கறுப்புக் கொடி காட்டி நின்ற படை ஒன்றின் தலைவராய் விளங்கிய லாலாலஜபதிராய் தடியடி ஏற்றுப் படுகாய முற்றார். சில தினங்களிலேயே மரணமும் அடைந்தார்.

லஜபதிராயின் அநியாயச் சாவு இந்தியமக்களின் ஆத்திரத்தைக் கிளப்பியது. அவர் பெற்ற அவமானமும் தாக்குதலும் இந்திய நாட்டின் அவமானமாக மதிக்கப் பட்டது. நாட்டின் மானத்தைக் காக்க ஆவேசத்துடன் எழுந்த இளைஞர்கள் பலர் அந்தக் சந்தர்ப்பத்தில் பிரமாதமான கவனிப்பையும், மக்களின் போற்றுதலையும் பெற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/75&oldid=1368258" இலிருந்து மீள்விக்கப்பட்டது