பக்கம்:நம் நேரு.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

நம் நேரு


காங்கிரஸ் தலைமையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

அவருடைய மறுப்பு கடைசி நேரத்தில் தான் கமிட்டிக்குத் தெரிந்தது. ஜவஹரைத் தலைவராக்கும்படி காந்திஜீ சிபாரிசு செய்துவிட்டார். காரியக் கமிட்டியினர் தர்ம சங்கடமான நிலையில் சிக்கி, வேறு வழி இல்லே என்ற தன்மையில், நேருவைத் தலைவராகத் தேர்ந்தனர்.

இது மகத்தான கெளரவம் என்பதை ஜவஹர் உணர்ந்திருந்தாலும், தனது மதிப்பு பாதிக்கப்பட்டு விட்டதாக எண்ணிப் புழுங்கினார் நேரு. அவர் நேர் வழியாக அந்த உரிய கெளரவத்தைப் பெறவில்லை: குறுக்கு வழியாக அங்கு சேர்க்கப்பட்டுவிட்டார் என்ற வேதனை பொங்கியது. ‘உங்கள் கெளரவமும் வேண்டாம், பதவியும் வேண்டாம்’ என்று திருப்பிக் கொடுத்துவிடத் துடித்தார் அவர். நல்லகாலமாக அவர் அப்படி எதுவும் செய்துவிடவில்லே.

அவ்வருஷம் ஜவஹர்லால் நேரு காங்கிரஸ் தலைவராக வந்ததில் குறிப்பிடத் தகுந்த விசேஷ அம்சம் ஒன்று பொருந்தியிருந்தது. முந்திய வருஷத்திய காங்கிரஸ் தலைவர் மோதிலால் நேரு ஆவர். ஆகவே தந்தைத்குப் பிறகு மகன் தலைமைப் பொறுப்புக்கு வந்தது விசேஷம்தானே. இதை எண்ணி வியக்க இக்நாட்டினர் தவறிவிட வில்லை.

இதற்கு முன்னரே ஜவஹர்லால் நாட்டின் வீரநாயகராக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தார். ‘இந்தியாவின் இணையில்லா வைரம்' என்றும், ‘பாரத பூஷணம்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/77&oldid=1368273" இலிருந்து மீள்விக்கப்பட்டது