பக்கம்:நம் நேரு.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

79


யும் கமலாவையும் இதர உறவினர்களையும் சர்க்கார் விடுதலை செய்தது. காந்திஜீயும் மோதிலால் நேருவைக் காண வந்திருந்தார். காங்கிரஸ் காரியக் கமிட்டியின் அலுவல்களும் நடைபெற்றுக் கொண்ட்டிருந்தன. முக்கியமான பிரச்னை ஒன்றை அவர்கள் அவசர அவசியமாக முடிவுகட்ட வேண்டியிருந்தது.

"நான் சீக்கிரமே போய்விடுடேன். சுயராஜ்யத்தைக் கண்டு அனுபவிக்க நான் இங்கு இரேன், ஆனாலும் உங்களுக்கு நிச்சய வெற்றி உண்டு என்பதை நான் அறிகிறேன்" என்று மோதிலால் காந்திஜீயிடம் சொன்னார். காந்திஜீ மோதிலாலின் அருகிலேயே இருந்தார். 1937 பிப்ரவரி ஆறாம் தேதி ஜவஹரின் தந்தை காலமானார்.

மக்களும் தலைவர்களும் பிறரும். அவரிடம் கொண்டிருந்த மதிப்பையும், தன்னிடம் காட்டும் அன்பையும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்து குவிந்த அனுதாபச் செய்திகளின் மூலம் நேரு உணர்ந்தார். தந்தை மரண மடைந்த அன்று நேரு திக்பிரமை உற்றது போலிருந்தார். பிறகு பல வாரங்கள் வரையிலும் தந்தை போய்விட்டார் என்ற உண்மையை அவர் புரிந்து கொள்ளவே சிரமப்பட்டார். அவர் தன்னுடனேயே இருக்கிறார் என்ற நினைப்பே அவருக்கு இருந்ததாம். இதைப் பற்றிய ரசமான சம்பவம் ஒன்று குறிப்படத் தக்கது.

தந்தை இறந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு நேரு குடும்பத்துடன், ஓய்வுக்காக இலங்கை சென்று துவார எலியாவில் தங்கியிருந்தார். அழகு சூழ்ந்த அந்த இடம் அவருக்குப் பிடித்திருந்தது. தந்தை மனசுக்கு இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/82&oldid=1369147" இலிருந்து மீள்விக்கப்பட்டது