பக்கம்:நம் நேரு.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

நம் நேரு


உகந்திருக்கும் என்று எண்ணினர் அவர். தந்தையையும் ஏன் அங்கே வரவழைக்கக் கூடாது என்று கேட்டது நேருவின் மனம். அவர் மிகவும் களைத்துப்போய் விட்டார்: சிறிது நாள் ஒய்வு அவருக்கு நலம் பயக்கும் என்று நினைத்து, அலகாபாத்துக்கு மோதிலால் நேரு விலாசத்திற்குத் தந்தி கொடுக்கவும் தயாராகிவிட்டார் அருமைப் புதல்வர். பிறகு சமாளித்துக் கொண்டார்.

நேரு அலகாபாத்துக்குத் திரும்பியவுடன் அதிசயமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. தபாலில் ஒரு கடிதம் வந்தது. மோதிலால் நேரு கைப்பட விலாசம் எழுதிய கடிதம் எங்கெங்கோ சுற்றி எத்தனையோ தபால் முத்திரை கள் ஏற்று வந்திருந்தது அது. மிகுந்த ஆச்சரியத்துடன் நேரு கவரைப் பிரித்துக் கடிதத்தை எடுத்து வாசித்தார். அது அவருடைய தந்தை அவருக்கு எழுதிய கடிதம். ஆனால். 1926-ம் வருஷம் பிப்ரவரி மாதம் 28-ம் தேதி எழுதப்பட்ட கடிதம். அது விலாசதாரை வந்து சேர்வதற்கு ஐந்தரை ஆண்டுகள் பிடித்தது! 1931-ம் வருஷக் கடைசியில் தான் நேருவிடம் சேர்ந்தது அக் கடிதம்.

நேரு ஐரோப்பாவுக்குக் கப்பலேறிய சமயத்தில், அலகாபாத்திலிருந்து மோதிலால் அக்கடிதத்தை அனுப்பியிருந்தார். அவர்கள் பிரயாணம் செய்த ‘இட்டாலியன் லாயிட்’ எனும் கப்பலின் மேற்பார்வை விலாசமிட்டு பம்பாய்க்கு அனுப்பப் பெற்ற கடிதம் அது. எப்படியோ அது உரிய காலத்தில் கிடைக்கத் தவறி விட்டது. பிறகு அக்கடிதம் பலப்பல இடங்களுக்கு விஜயம் செய்திருந்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/83&oldid=1369164" இலிருந்து மீள்விக்கப்பட்டது