பக்கம்:நம் நேரு.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

85



எங்கும் ராணுவ தர்பார்-போலிஸ் நோக்கு-தான் நீடித்து வந்தது.

அந்த வருஷத்தில் கமலா நேருவின் உடல் நிலை மிகவும் மோசமாகிவிட்டதால், அவரை ஐரோப்பாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டியது அவசியமாயிற்று. அதை உத்தேசித்து அரசாங்கம் ஜவஹரை செப்டம்பர் 4-ல் அல்மோராவிரிலிருந்து வெளியே அனுப்பியது. அப்பொழுது அவருடைய தண்டனை காலத்தில் ஐந்தரை மாதங்கள் பாக்கி கிடந்தன.

நேரு ஜெர்மனியீல் நோயாய் கிடந்த மனைவியைக் காண விமானம் மூலம் பறந்து போனார்.


அத்தியாயம் 11.


1936 பிப்ரவரி 28-ம் தேதி கமலாநேரு மரணமடைந்தார். மனைவி காலமாவதற்குத் சற்று நேரத்திற்கு முன்பு தான், நேரு இரண்டாவது முறையாக அகில இந்தியக் காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி அவருக்குக் கிடைத்தது. சில தினங்களிலேயே அவர் விமானம் மூலம் இந்தியா திரும்பினர். திரும்புகிற வழியில் அவருக்கு அதி விசேஷமான சம்பவம் ஒன்று குறுக்கிட்டது. அக்காலத்திலே, உலகத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்து கொண்டிருந்த இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முலோலினி நேருவைச் சந்தித்துப் பேச ஆசை கொண்டிருந்தார். கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார் அவர். ஆனால் நேரு அவரைக் கண்டு பேச விரும்பவில்லை. தன்னைச்-

6
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/88&oldid=1376988" இலிருந்து மீள்விக்கப்பட்டது