பக்கம்:நம் நேரு.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

93


குலைந்து வந்தது. பதவிப் பித்தும், ஊழல்களும் பெருகிவந்தன. சில வருஷங்களுக்கு முன்பு காங்கிரஸைக் கலைத்துவிடுங்கள் என்று காந்திஜீ கூறிய வார்த்தைகள் தீர்க்க தரிசன உண்மை என்றே தோன்றியது. நாட்டில் மலிந்துள்ள இதர அரசியல் கட்சிகளின் பிரசாரத்தினாலும் காங்கிரஸின் பெயருக்கு மாசு ஏற்பட்டு வந்தது.

காங்சிரஸைக் காப்பாற்றி, அதற்கு மறுபடியும் பெருமை தரக்கூடியவர் ஜவஹர்லால் நேரு ஒருவர் தான் என்று கட்சியினர் உணர்ந்தார்கள். அதனால் 1958-ல் அவரையே தலைவராகத் தேர்ந்தேடுத்தார்கள். 1954ம் வருஷம் கல்கத்தா அருகிலுள்ள கல்யாணியில் கூடிய காங்கிரஸுக்கும் நேரு தான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு அவர் நிகழ்த்திய தலைமைஉரையில் இந்தியப் பிரச்னைகள், உலக தொடர்பு பற்றிஎல்லாம் விரிவாக ஆராய்ந்தார். யுத்த பயங்கரம், சமாதானத்தின் அவசியம், இந்தியாவின் அயல் நாட்டுக் கொள்கை முதலியன பற்றியும் தெளிவு படுத்தினர்.

"ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகச் சொல்லிக் கொண்டும், சுதந்திரத்தின் பெயராலும், வேண்டாத சூழ்நிலை ஒன்று உருவாகி வருகிறது. அது ஜனநாயகத்தின் மூச்சைப் பிடிக்கிறது; சுதந்திரத்தைத் திணறடிக்கிறது. முடிவில் அது இரண்டையுமே இல்லாமல் செய்துவிடும் என்றே தோன்றுகிறது. உலகத்தில் நாம் தான் தலைமை தாங்க வேண்டும் என்று நாம் உரிமை கொண்டாடவுமில்லை; ஆசைப்படவுமில்லை. இதர நாடுகளின் உரிமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/96&oldid=1369172" இலிருந்து மீள்விக்கப்பட்டது