பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செருகலால் வேதங்களின் நல்ல வித்துகள் ஊடே விளைந்த பதர்கள் ஆகும்.

இயற்கை வழிப்பாட்டைத் தமிழர்களிடமிருந்து கற்ற வந்தேறிகள் இறைவன் என்றும் இந்திரன், வருணன் என்றும் வாழ்வியக்க உயிர்ப்பாற்றலை (Life Force) எப்படி ஆண்களாக மட்டும் கொண்டனர்? தாய்மையைப் போற்றும் வாய்மை வாணர்கள், தூய்மையான பெண்களை வாய்மொழியில் வாழ்த்தாதே -வணங்காதே- வழிபடாத நிலை என்னென்று புரியவில்லை! வேதகால பாவியல் மாதர்களே கூட இங்கே தவறிவிட்டார்களோ என்றையம் ஏற்படுகிறது.

உலகின் பல உயரிய எழுத்திலக்கியங்களே நிறையும் குறையும் கலந்துள்ளபோது வாய்மொழி இலக்கியத்தில் காலந்தோறும் இடைச்செருகல் ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றையும் மீறி உண்மைகள் விண்மீன்களாய்க் கண்ணை யும் கருத்தையும் கவர்ந்து மண்ணில் நறுமண வண்ண மலர்களாய், வாடா மலர்களாய் நின்று நிலவுகின்றன. அவையே இந் நூலில் காணும் சுவைக்கனிகள். சொல்லின் பத்திலும் பொருளின்பத்திலும் நல்லின்பம் தருபவை. வேதகாலச் சொல்லேருழவர்களின் நெல்மணிகளும் பல்வேறு கூலங்களும் இன்றும் நம் உயிர்க்கும் உடற்கும் ஊட்டம் தருவன. நாட்டம் பெறுவன. ஏற்றம் உறுவன.

- இயற்கையோடியைந்தது வேதகால வாழ்வு. எனவே தான் இயற்கை இறையை இறைவனாகக் கண்டது, தொழுதது, வணங்கியது. இயற்கையின் வெளிப்பாடுகள் அனைத்தும் ஓர் ஒத்திசைவைக் கொண்டவை. ஒத்திசைவு எப்போதும் பாட்டாக