பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 ১৯র্ণীল

எங்களிடம் கனிவு காட்டுவாயாக,

இரக்கம் கொள்வாயாக. (யசுர் 36) o தீய வன்முறை ஆற்றல்களால் ६ - எங்களுக்குத் தீங்கு நேராதிருக்கட்டும் நிலமகளே, ஏற்படக்கூடிய துன்பங்களிலிருந்து என்னைக் காப்பாற்றிடுவாய், விக்ம்பே, வானத்தில் ஏற்படக்கூடிய துன்பங்களிலிருந்து என்னைக் காப்பாற்றிடுவாய். (இருக் 7)

தலைவா, தீமை செய்வதிலிருந்து என்னைத் தடுத்து நிறுத்திடுவாய். அல்லல்கள் நிறைந்த சுழித்தோடும் ஆற்றைப் படகில் செல்வதுபோல், கடந்து செல்லத் துணை புரிக.

(அதர் 1)

பரிவிரக்க முடைய, மக்கள் யாவரும் தவறு செய்வது போல், நாங்களும் தவறு செய்து, நாங்கள் செய்யும் வழிபாட்டில் உன்னைக் களங்கபடுத்தி விடுகிறோம். எங்கள் மேல் இரக்கம் காட்டுவாய். உங்கள் சீற்றத்தில் எங்களைச் சாகடிக்காமல் இருப்பாயாக. (இருக் 1)

தவறு செய்வது மாந்தர் இயற்கை, ஆசைகளின் முழு உருவம் மாந்தர். எங்களுடைய பெரும் பிழைகளை மன்னித்துவிடுக. 1

(இருக் 1)

த.கோ - தி.யூரீ