பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O9

பேரொளி பொருந்திய பெரும, அருகிலிருந்தாலோ, தொலைவிலிருந்தாலோ, ஏழைகளை அடிமைப் படுத்துகிறவன். உனது அடிகளால் நசுக்கப்படட்டும். எங்களுடைய முன்னேற்றத்திற்கும் வளமைக்கும் நீ தான் எங்களுடனிருந்து உதவி புரியவேண்டும். (இருக் 1)

உன் நம்பிக்கையுடைய அன்பர்களின் எதிரிகளுடைய செல்வத்தை அழித்துவிடு. இடையூறுகளை யெல்லாம் கடந்து ஆற்றினூடே மக்களை எவ்வாறு படகு ஏற்றிச் செல்லுகிறதோ அதுபோல் நீயும் எங்களை இடர்களிலிருந்து கரையேற்றுவாய். (இருக் 1)

எவனொருவன் பழிவினைச் செயல்களுக்குத் துண்டுதலாயிருக்கிறானோ, அவன் தன் இனத்தாருடைய அன்பையும், ஆதரவையும் மட்டுமின்றி, உன்னுடைய அன்பையும் ஆதரவையும் இழப்பவனாகிறான். (இருக் 5)

எவரெல்லாம் மற்றவர்களுடைய உழைப்பின் மூலம் செல்வமீட்டி - அதை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் எண்ணமில்லாமல் இருக்கிறார்களோ, அவர்களுடைய செல்வத்தைப் படிப் படியாகக் குறைத்திடுவாய், நேர் வழியிலிருந்தும் நாணயத்திலிருந்தும் தடம் மாறி செல்பவர்களுக்குச் செஞ்சுடர் ஞாயிறே திருவருள் வழங்காதிருப்பாயாக,

த.கோ - தி.யூரீ