பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123

மூழ்கி இருப்பவனுமான ஒரு மாந்தனைப் பற்றிய மொழிகள் இவை. காதில் விழும் எந்தக் கருத்துகளினாலும் இவன் பயன் ஏதுவும் பெறுவதில்லை. (இருக் 10)

J.

யாதொரு பயனுமில்லாத எண்ணங்களில் 鷲

நட்பில் நாட்டமுடையவனுக்கே அறிவுக் கூர்மையுடைய பொருண்மைகள் சொல்லப்படுகின்றன. கடைசி வரை இந்தத் தொடர்பு இருந்து வருகிறது. தங்களிடையே அவர்கள் வினா எழுப்பிக் கொண்டு, விடை சொல்லிக் கொண்டு இருந்த போதிலும் பலன் எதுவும் விளைந்துவிடப்போவதில்லை. காரணம் சொற்கள் என்ன சொல்கின்றன என்பதையே அறியாதவர்கள் அவர்கள். பூசாரிகள் இணைந்து போற்றிப் பாடல்கள் பாடும் பொழுது அவை மனத்தினால் உந்தப்பட்டு நெஞ்சத்தினால் பக்குவப்பட்டவையே ஒரே வகையாகவே அவர்கள் சொற்கள் அமைகின்றன. சமநிலையில் உள்ளவர்களாயினும் அவர்களில் சிலர் விரைவாகவே முன்னேற்றம் காண்கின்றனர் பலர் பின் தங்கிவிடுகின்றனர். (இருக் 10)

மொத்தத்தில் அவர்கள் முன்னேறுவதுமில்லை. பின்னடைவதுமில்லை; அவர்கள் பூசாரிகளுமில்லை. புனிதச் செயல்கள் புரிபவர்களுமில்லை

த.கோ - திரு