பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

;

§

படைத்தவனின் அருளைப் பொறுத்தது உலகு இருத்தல் என்பதால் அதற்குக் கட்டுப்பட்டிருப்பதுதான் உலகின் நிலையும்.

(இருக் 10)

ஆட்டுவிக்கும் ஆற்றல் எங்கிருந்து பிறக்கிறது, எங்குச் சென்று மறைகிறதுயாரே அறிவர் இந்த மறைத்திரை? உண்மை அறியும் தெய்வீக மாந்தர்கள் உலகம் தோன்றி பல்லாண்டுகள் பின்னரே பிறந்தவர். இந்நிலையில் உண்மையை உணர்ந்தவர் யார், எவர்?

(இருக் 10)

படைப்பு எங்கிருந்து தோன்றுகிறது? அதைக் கையாளுபவர் அல்லது கையாளாதவர் எவர்? விண்ணிலிருந்து எவர் இதைக் கண்காணிக்கிறாரோ அவருக்கு, அவருக்கு மட்டுமே, கமுக்கம் தெரியும். ஏன், அவருக்கும் கூடதெரியுமா என்ன? இறைவா,பரந்து விரிந்துகொண்டே போகும் பேரொளி வீச்சுடைய ஞாயிற்றின் உலகில் அமைதி நிலவும்பொருட்டு அது உதயமாகும்படி வாழ்த்தி அருள்வாய். அமைதியும், ஒற்றுமையும் உலகில் நிலவும்படி, அருட்பேறு அடிவானத்தின் நான்கு பகுதிகளுக்கும் வழங்கட்டும்.

(இருக் 7)

நற்றமிழில் நால் வேதம்