பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t

148

கண்ணுக்குத் தென்படுகிற நூலில், கண்ணுக்குத் தெரியாத இழையைப்பற்றி, எவன் அறிந்திருக்கிறானோ, அவன்தான் உண்மையைப் புரிந்து கொண்டவன். (அதர் 10)

உழைப்பு, பொறுமை, விடாமுயற்சி, ஆகியவற்றால்தான் பேருலகு உருவாகிறது. மெய்யறிவினால் புரிந்து கொள்ளப்பட்டும் உண்மையின் பலம் கொண்டும் உருவாகிற இந்தப் புடவி நிலைத்து நிற்கிறது. (அதர் 12)

நீடித்து நிற்கும் அமைதிக்காக எல்லாம் வல்ல இறையின் பெருமையை ஆழ்ந்து எண்ணுவோம். (அதர் 19)

தெய்வீக விருப்பத்தின் தூதுவர்கள் நாங்கள் என்பதை உணரச் செய்வாய். (யசுர் 2)

தெய்வீகத் திருக்காட்சியால் ஊக்கமடைவாய். (யசுர் 4)

பகுத்தறியும் ஆற்றலை மேன்மைப்படுத்திக் கொள்வாய். அப்படியே உன் உடலில் எவராலும் வெல்லமுடியாத வீரத்தை ஊன்றிக் கொள்வாய். (யசுர் 6)

வேதங்களின் தெய்வீகத் துணை உனக்கு அமைதியும் வளமையும் அளிக்கும். (யசுர் 7)

வாழ்முதல் பெரும நீ நிலைத்திருப்பவன் எல்லாம் அறிந்திருப்புவன், அருளாளன். மங்காத உன் புகழை என்றென்றும் பாடுகிறோம். தெய்வீக வழியில் எங்களை வழிநடத்தி

நற்றமிழில் நால் வேதம்