பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16.1

அல்லல் படும் உடலை நிலை நிறுத்தும் மின்கதிர் போல் ஒளிரும் ஆன்மா. கிளர்த்தெழும் புலன்களைச் சமன் படுத்துகிறது. இடைப்பகுதியை அளந்தெடுத்துத் *. தெய்வீகம் கமழும் மன அமைதியை அளிக்கிறது.

(இருக் 2)

தேனினும் இனிய ஆன்மிக அருளால் மகிழ்வின்பமுற்று ஆன்மா அசைக்க முடியாத மன உறுதியை கைக்கொள்கிறது. நஞ்சு போன்ற கீழ்நிலையான எண்ணங்களை ஒடுக்கி வைக்கிறது. பறவைகள் தங்கள் தங்கள் கூட்டை நோக்கி விரையும் சமயத்தில் இந்தப் பேரின்ப நலம் இழைந்தோடுகிறது.

(இருக் 2)

சிறு மனப்பான்மை, பேராசை, தீய எண்ணம் ஆகிய கீழான குணங்களையெல்லாம் திறமை வாய்ந்த ஆன்மா அழித்துவிடுகிறது.

(இருக் 2)

மன வளம்பெற்ற இறைவன், குறுகிய மனப்பான்மை, பேராசை, கெட்ட எண்ணம் ஆகியவற்றை அழிக்கிறான். பத்தர்களும், அறிவாளிகளும் நலம்பெற, வன்குணங்களை அகற்றுகிறான். (இருக் 2)

உள்மனமே, உன்குரல், தெளிவாகவும் உரத்தும் இருக்கட்டும்.

த.கோ - தி.ழரீ