பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167

நுண்ணறிவாகிய சகடத்திற்கு வேகமளிப்பது ஒளி வீசும் ஆன்மாவே இன்றியமையாத புலன்களை அடக்கி யாண்டு உள்மனப் போராட்டங்களிலிருந்து அவற்றைக் காப்பாற்றுகிறது. மனக்குழப்பம், தடுமாற்றம் ஆகிய இருள் முகில்களுக்கு இடமளிக்கிற பொழுது, உடல் ஆற்றல் மனத் திண்மை இவற்றிற்கிடையே சில சமயங்களில் முரண்பாடு தோன்றுகிறது. அப்பொழுதெல்லாம் உள்ளொளி கொண்ட ஆன்மா வழிகாட்டியாக மாற்றம் கொள்கிறது. (இருக் 4)

இயல்பாகவே ஆற்றலுள்ள நுண்ணறிவு மனதும்கூட ஆன்மாவிற்கு அடிபணிந்து நடக்கிறது. அடங்கி நடக்கிற மனைவிபோல உடலும் ஆன்மாவின் கட்டளைக் கேற்பவே நடந்து கொள்கிறது. அதன் வல்லமையை ஆன்மா மற்ற உறுப்புகளுடன் பகிர்ந்து கொள்கிறது. அவையும் ஆன்மாவிற்கு மதிப்பளிக்கின்றன. (இருக் 5) இறைவன் வழங்கிய ஆன்மிக மகிழ்ச்சியாகிற அமுதத்தை ஆன்மா சுவைத்துப் பார்க்கிறது. பருந்து தனது இரையைக் கீறி எறிவதைப்போல் ஆன்மா காமவெறியின் தலையை வெட்டி எறிகிறது. தவறிழைக்கும் மனதிற்குக் கருணை காட்டி ஆன்மா பாதுகாப்பளிக்கிறது. புகழீட்டிட மனிதனுக்குத் தகுதியை அளிக்கிறது

(இருக் 6)

த.கோ - தி.யூரீ