பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O3

கடமை முறைமை இவற்றின் வழி நடப்பீராக.

நல்ல வீரமிக்க குழந்தைகள் உங்களுக்குப் பிறக்கட்டும்.

உங்களுக்குரிய ஒரு வீட்டை கட்டிக் கொள்ளுங்கள்.

(அதர் 14)

மணமகளே, உன் குடும்பத்தினர் அனைவருடைய நல்வாழ்வையும் கவனித்துக் கொள். அவர்களுடைய இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள். உன் வருகை உன் கணவன், மாமனார், மாமியார், குடும்பத்தில் அனைவருக்கும் ஆகூழ் ஆகட்டும்.

(அதர் 14)

மணமகளே, வீட்டில் அடி எடுத்து வைத்த பின் குடும்பத்தின் ஒளிவிளக்காய்த் திகழுவாயாக. அறிவுத்திறனும் புரிதலும் கொண்ட நீ குடும்பம் நன்கு வாழ, நல்ல உடல் நலப்ப்ாங்கான நெறிமுறைகளைப் பின்பற்றுவாயாக. உன்னை இறைவன் வாழ்த்தட்டும்.

(அதர் 14) இந்தப் பெண்ணின் தந்தையாகிய நான், எங்கள் குடும்பத்துடன் உள்ள சகல தொடர்புகளிலிருந்தும் இவளுக்கு விடுதலை அளிக்கிறேன். இனி இவளுடைய தொடர்பெல்லாம் இவளுடைய கணவனுடய குடும்பத்துடன்தான். அவர்களிடமிருந்து இவள் என்றென்றும் பிரிந்து போகக்கூடாது. அறியாப் பெண்ணாகயிருந்த என் மகள் இனித் தனது #

த.கோ - தி.யூரீ