பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

;

. 204

அழகும், வீறியமுமுள்ளவனாகிய கணவனுடன் பெருமகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி நன்கல மக்களைப் பெறுவாளாக, (இருக் 10)

மணமாகா நிலையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி வந்த இந்தப் பெண், இந்த வாலிபனைத் தன் கணவனாக இப்பொழுது ஏற்றுக் கொள்கிறாள். வீட்டிற்கு மகிழ்ச்சியும் வளமையும் இவள் கொண்டு வரட்டும். தன் கொழுநன் வீட்டிற்கு வந்தபின், மேன்மையான குழந்தைகளைப் பெற்றெடுத்து,

வீட்டில் அரசியாக மதிக்கப்படட்டும்

எல்லோருடைய மரியாதையும் நல் வாழ்த்துகளும் இவளுக்கு வந்து சேரட்டும். (அதர் 2)

மணமகளே, உனது அழகு, உள்ளத்தின் நற்பண்புகளையும் கண்டு, உன்னை, நான் தழுவிக் கொள்கிறேன். வேறு எவரிடமும் நான் நலன் தேட மாட்டேன். அத்தகைய எண்ணங்களைக் கூட என் மனத்தில் நுழைய விடமாட்டேன். அறநூல்களுக்கு ஏற்றபடி நான் நடந்து கொள்வேன்.

(அதர் 14)

ஓ, மாந்தனே, இல்வாழ்வாளின் கடமைகளைச் செய்யத் தயங்காதே. துணிவுடனும், மன உறுதியுடனும்

நற்றமிழில் நால் வேதம்