பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O5 ש"י அறத்தின் வழி நடந்திடுவாய். 駕

வல்லமை, தன்மானம், வீரம், ஆகிய

J.

சிறந்த குணங்கள் கொண்ட நீ இறைவன் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு, மகிழ்ச்சியுடனிருப்பாயாக. (யசுர் 3)

மணமக்களே, வாழ்க்கையில் அறிவுக்கூர்மையுடனிருந்து பெருந்தன்மையைக் கடைப்பிடித்து நல்வாழ்விற்கு வழி வகுக்கும் வேதங்கள் கூறும் முறைகளை யாவரும் பின்பற்ற, நீங்கள் எடுத்துகாட்டாக இருப்பீர்களாக. (யசுர் 2)

உனது பரிசுகளை நான் ஏற்றுக்கொள்வதைப்போல். நீயும் நான் அளிக்கும் பரிசுப் பொருள்களை ஏற்றுக்கொள்வாய். ஏனெனில், ஏற்பு, அளிப்பு, என்கிற உயர்ந்த பண்பின் அடிப்படையிலேதான் உலகம் தன் சமநிலையை வகித்து வருகிறது. வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருப்பதும் இந்த நற்பண்புதான். (யசுர் 3)

இளம் இணையர்களே, பெருந்தன்மை, தியாகம் கொண்டு இயங்கிவரும் வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை போடாதீர்கள். ஆன்மாவின் குரலுக்கு எதிராகச் செயல்படாதீர்கள் மனது இடும் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்வீர்களாக. (யசுர் 5)

த.கோ - தி.பூரீ *ుk