பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 213

இறையே, உயர்ந்த புதையல்களை எமக்களிப்பாய்.

சீரிய மனம், ஆன்மிக ஒளி, நிறைந்த செல்வம், நல்ல உடல்நலம், இனிமையான வாக்கு, வளமான நாள்கள் ஆகியவையே இந்தப் புதையல்கள்.

(இருக் 2)

தங்கள் செல்வத்தைத் தேவைப்படுவோர்களுக்கும், வறியவர்களுக்கும் பகிர்ந்தளிக்காத நாணயமற்ற செல்வர்கள் மேல் இறை கருணை காட்டுவதில்லை. இந்தப் பேராசை படைத்தவர்களின் செல்வத்தை இறை பறித்துவிடும். பெருந்தன்மையாளருக்குச் செல்வத்தை வாரி வழங்கும். (இருக் 5)

மற்றவர்களின் உழைப்பில் பயன் பெறுபவர்களிடமிருந்து செல்வத்தைப் பறித்துவிடு, இறையே, இடருற்றுப் பயனிட்டுபவர்களுக்குரிய பங்கை இவர்கள் அளிப்பதில்லை. (இருக் 5)

இறையே, உண்மையாக உழைத்துக் கிடைக்கும் செல்வத்தை நான் அனுபவிக்க அருள் புரிவாய்.

(இருக் 8)

பணத்திற்கு மதிப்பளித்து ஒழுங்கான முறையில் செல்வத்தைச் சேர்க்க மனிதன் முயற்சி செய்யட்டும். தன் நுண்ணறிவுடன் கலந்து ஆய்ந்து, மேலும் சிறப்பாக உண்மையைப் புரிந்து கொள்ளட்டும். (இருக் 10)

த.கோ - தி.பூதி