பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219 "ঃ வல்லமையுள்ளவனாகச் செய்திடுவாய்.

அவனை வெற்றி வீரனாகத் திகழ்த்திடச் செய்வாய், செல்வம் யாவற்றையும் அவனுக்கு வாரி வழங்கிடுவாய். அவனின் எதிரிகளை அழித்திடச் செய். இளவரசர்கள் யாவருக்கும் அவனே தலைவனாக இருந்திடட்டும் அரிமா போல், தீய ஆற்றல்கள் யாவற்றையும் அவன் விரட்டி அடிக்கட்டும். இறைஅருள் பெற்று, மக்கள் ஆதரவு பெற்று, துயவை யாவற்றினுடையவும் துணைபெற்று, அவன் எதிரிகளை வென்றிடட்டும். (அதர் 4)

வீரம் செறிந்த இரத்தத்தில் உதித்த முதல் மாந்தன் அவன். மன்னர் குருதி ஒடும் போராளி அவன். மக்களை நெருங்கினான் அவன். உற்றார், சுற்றாருடன் தன் செல்வங்களைப் பகிர்ந்து கொண்டான் அவன். இந்தப் பற்றும், பெருந்தன்மையும் மக்களை அவன்பால் ஈர்த்தன. அவன்தான் ஆண்டகை என்கிற தொல்பழங்கால மனிதன். (அதன் 15)

அரசவைக்கும், படையிடமும் அவன் பெருமிதமாக நடந்து செல்கிறான். மகிழ்வின்பங்கள் அவனைப் பின் தொடர்கின்றன. அரச பரம்பரையின் மரபுகளை இவ்வாறு காத்துவரும்

த.கோ - தி.யூரீ