பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

எல்லாம் ஒன்றில், எல்லாவற்றிலும்

ஒனறு

உன்னிடத்தில் நீ எவ்வாறு நடந்து கொள்வாயோ, அவ்வாறே நீ மற்றவர்களிடமும் நடந்து கொள்வாய். உயிர்வாழும் அனைத்து மக்களையும் உன் உயிர்த்தோழர்களாகக் கருதிடுவாய். ஏனெனில் அனைவரிடமும் ஒரே ஆன்மாவே வாழ்கிறது. உலகளாவிய அந்த ஆன்மாவின் ஒரு பகுதிதான் அனைவருமே. எவனொருவன் யாவரையும் தன் ஆன்ம நண்பர்களாகக் கருதி அவர்கள் யாவரையும் ஒன்றுபோல் விரும்புகிறானோ, அவன் என்றுமே தனிமையில் இருப்பதில்லை. மாண்புத் தன்மைகளாகிய மன்னித்தல், இரக்கம், சேவை ஆகிய குணநலன்களைக் கொண்டவன் எல்லோராலும் விரும்பப்படுகிறான். அத்தகையவன் தன் வாழ்நாள் முழுவதும் மட்டற்ற மன மகிழ்ச்சியை நுகர்கிறான். (யசுர் 40)

(5>#9)