பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

253

பாறைகளும், கூழாங்கற்களும் சிதறிக்கிடக்கும் கட்டுக் கடங்காத காட்டாறு போன்றது மனித வாழ்க்கை. துணிவுள்ளவர்கள் அதற்குள் இறங்குகின்றனர். கரையிலேயே அமர்ந்து இடர்களைப் பற்றியே நினைத்திருந்தால், நீ ஒரு பொழுதும் கரை சேரப் போவதில்லை. உனது அச்சங்கள், குற்ற உணர்வுகள், தளர்வுகள், சிக்கல் நிறைந்த உறுப்புகள் ஆகியவற்றைப் பின் தள்ளிவிடுவாய். இவ்வாறு எதிர்மறை ஆற்றல்களிலிருந்து விடுபட்டு, எளிதாய் ஆற்றைக் கடந்து செல்வாய். (அதர் 12)

ஒ, மானுட ஆன்மாவே, உனது வலிமையையெல்லாம் ஒன்று திரட்டு. நிலைத்திருக்கும் வாழ்வாகிய ஒரு நீரோட்டம் கற்படுகையில் தவழ்ந்து செல்கிறது. கொடிய ஆற்றல்களின் தன்மைகளைப் புறம் தள்ளிவிட்டு, உறுதியான அடி வைத்து முன்னேறிச் செல்வாய். நிலைத்திருக்கும் இன்ப வாழ்வை அடைவாய்.

(அதர் 12)

மாண்டுவிடாதீர் மாந்தர்களே, நெடுங்காலம் வாழ்ந்திடுவீர் உறுதியான மனவலிமை கொண்டு, வீரமுள்ள ஆன்ம வலுவுடன் வாழ்ந்திடுவீர்,

இறப்பச்சதிற்கு இடம் கொடாதீர். (அதர் 19)

வீரமிக்கவர் வெல்லப்படுவதில்லை. (அதர் 20)

த.கோ - தி.பூரீ

"डू

شس.