பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

எவனொருவன் வீரம்,உறுதி, அழுத்தம்

ஆகிய பண்பு நலன்களைக் கைக்கொள்கிறானோ, அவனே போரில் வெற்றியடைகிறான். (அதர் 20)

இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும்போது, நீ மனவலிமை, உறுதியையும், கைவரப் பெறுகிறாய். ஒருக்காலும் அவற்றை எதிர்த்திடாதே. -(யசுர் 1)

தெய்வீகக் கடமைகளைச் செய்திடவும், போலி மதிப்பீடுகளுக்குள் மறைந்திருக்கிற உண்மை நிலையை வெளிக் கொணரவும், உனது அறிவுத்திறனுக்கு ஒளி சேர்த்திடுவாய்.

(யசுர் 2)

ஆன்மிக மகிழ்ச்சியின் களஞ்சியங்களில் அண்டை அயலாரையும் முனிவர்கள் அனைவரும் பங்கு பெறச் செய்யட்டும். (யசுர் 3)

இறைவா,

பொறுமை, விடாமுயற்சி ஆகியவற்றின் துணைகொண்டு எமது

அறியாமையை விரட்டியடிக்க

நீ உதவிடுவாய். (யசுர் 3)

வீரம் நிறைந்த போர்வீரனே, கழுகுபோல் உன் எதிரியின் மேல் தீடீரெனப் பாய்ந்து அவனை அழித்து விடு. } (யசுர் 4)

நற்றமிழில் நால் வேதம் سسة

t