பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

பொறிபுலன்களை அடக்கியாள

嘉 மன வலிமையை வளர்த்துக் கொள். (இருக் 5)

l. ; அறியாமையாகிற இருள் திரையை அகற்றிவிடு.

(சாம 319)

பேராசை என்கிற கொடிய உணர்ச்சியை அழித்துவிடு. காரணம் அது உண்மையில் ஓர் ஓநாய்.

(இருக் 6)

செருக்கு கொண்ட அன்பனின் வழிபாடு அடக்கமாக்கப்படட்டும் (இருக் 6)

கேடு விளைவிக்கும் எண்ணங்களை எண்ணாதே; செயல் படுத்தாதே. நேர் வழியிலேயே நட.

(இருக் 10)

அற அமைதி முறையில் மெய்யறிவைத் தேடுபவனே,

தீவிரமான பற்றாளனே, பொறாமை, பேராசை,

வேறு கெட்ட உணர்ச்சிகளைத் துடைதெறிந்து விடு.

(சாம 308)

சோம்பியிருக்கும் மனம் தீய எண்ணங்களுக்கு எளிதில் இரையாகிறது. (இருக் 10)

கொடிய எதிரியுடன் போரிட்டு அவனை வெற்றிகொள்ளும் வீர மறவர்களை அழித்துவிடவேண்டும் என்கிற கெட்ட எண்ணங்கொண்ட மனிதர்களை நாம் முற்றிலுமாக அடக்கி, ஒடுக்கிப், பொசுக்கிவிட வேண்டும். (அதர் 4)

நற்றமிழில் நால் வேதம்