பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

269

படைப்பவனில் உள்ளடங்கியவையே என்பதும் அவனுக்கு நன்றாகத் தெரியும். (இருக் 10)

இந்தப் பேரண்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் பரவியிருக்கிறவனும் முழு வல்லமையுள்ளவனாகவுமுள்ள இறைவனின் ஆணைக்குட்பட்டது. இறைவனை நாம் வெவ்வேறு உருவங்களில் காண்கிறோம். - இந்த உலகங்கள் அத்தனையையும் அவன் நம் கண்முன் நிறுத்துகிறான். பரந்த வானை ஊடுருவிச் செல்லும் அளந்து முடியாத காலம் என்று இறைவனை அவர்கள் அழைக்கிறார்கள். (அதர் 19)

எல்லாம் வல்ல இறைவனுக்குத் தடம் பிறழாத அன்பார்வமுடன் எங்கள் மனமார்ந்த வணக்கத்தை அளிக்கிறோம். அவன் அனைத்தையும் அறிந்தவன். உயர்ந்த நிலையில் உள்ளவன். ஒளி வெள்ளத்தால் சூழப்பட்டவன். ப்ேரண்ட ஆற்றல்களை வெளிப்படுத்துகிற நிலம், நீர், நெருப்பு, செங்கதிர், வெண்கதிர், விண்மீன்" கூட்டம், ஆகியவை தோன்றுவதற்குக் காரணன் அனைத்தையும் அறியும் வல்லமை படைத்த இறைவன். அறிவாற்றல் பெற்ற அன்பானவர்கள், வாழ் நாள் முழுவதும் வழிகாட்டியாயிருக்கும் இறைவனை

த.கோ - தி.யூரீ