பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

275

வானகத்தின் இந்தத் தெய்வ மகள் இருளை விரட்டியடிக்கும் அதே நேரத்தில் மனித இனத்தைத் தூக்கத்தினின்றும் எழுப்புகிறாள். பேரொளி ஆற்றலினால் இருட்டின் கூர்மையை ஊடுருவிச் சென்று சோர்வை அகற்றுகிறாள் என்று அறியப்படுகிறாள். (இருக் 6)

காற்றின் விரைவுடன் வந்து காலைப் பொழுதுகள் நமது வழிபாட்டை வாழ்த்தட்டும். கூடவே,தெய்வீக அழகையும், செழுமையையும் கொணரட்டும். - (இருக் 6)

மங்களமான காலைப்பொழுது நாம் செல்லும் பாதைக்கு வெளிச்ச மூட்டட்டும் நமக்குச் செல்வம், ஆற்றல், அறிவு, நிலைத்திருத்தல் ஆகியவற்றை அளிக்கட்டும். செழிப்பையும், அன்பையும் கொண்டு வரட்டும். தெய்வீக ஆற்றல்களுடன் இணைந்து நமக்கு அருளை

வழங்கிக் கொண்டேயிருக்கட்டும். (இருக் 7)

தீங்கு سعة ممنوعgenفبمخففيه சிறப்பாகவும் இந்தப்

பாதைகளை நான் காண்கிறேன்.

ம்மைத் தெய்வீக ஆற்றல்களிடம் இட்டுச் செல்கின்றன.

காலைப் பொழுதின் அழகொளிகிழக்கில் கட்டற்றுச் சுடர் விடுகிறது, மேற்கு முகமாக நகர்கிறது, அதி உயரத்திற்குச் செல்கிறது. (இருக் 7)

த.கோ - தி.புதி