பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jo

280

ஞாயிறு

உலகைப் படைத்த மேலானவனுக்கு நாங்கள் வணக்கம் செலுத்துவது போல, செம்பருதிக் கதிர்களினால் முத்தமிடப்படும் ஆற்று நீருக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம்.

(இருக் 1)

ஞாயிற்றின் தேர்ச் சகடங்களுக்கு இரண்டு பணிகள் உள்ளன; ஒன்று அறிவைப் புகட்டுகிறது, மற்றொன்று தீமைகள் யாவற்றையும் அழிக்கின்றது.

(இருக் 5)

தனது ஒளிமிக்க விரைவுள்ள தேரை அணியமாக்கிய உடனேயே, ஞாயிறு பேரொளிமயமான வானகத்தின் மேல் செல்கிறான். பெருங்கடலுடே கப்பல் செல்வது போல், இறைவன் அவனை இயங்கச் செய்கிறான்.

(இருக் 5)

நற்றமிழில் நால் வேதம்