பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

அழகான பொருள்களை அள்ளி வீசும் மணமகளுக்குப் போட்டியிடும் இளைஞர்கள் போல், அவை யாவும் தொழுகைப் பாடல்கள் பாடும் கலைஞர்களைப் போல் ஒரே பண்ணில் இசைபாடுபவர்கள் போல்.

(இருக் 10)

ஒரே குரலில் சாமகீதம் இசைக்கும் சாம ஓதிகளைப்போல், உயரத்திலிருந்து, கீழ்நோக்கிப் பாய்ந்து வரும் நீர்போல், பரிசுக்குப் போட்டியிடும் கொடைத் தன்மை வாய்ந்த தேரில் வரும் வீரர்களைப் போல, சுழற்காற்றாய்ச் செல்லும் உயரின புரவிகளைப் போல, திகழ்பவர்கள் அவர்கள்.

(இருக் 10)

தோரணையுடன் முன்னேறிச் செல்லும் பெருவள்ளல் போல், அழகான அன்னையர்களின் விளையாட்டுக் குழந்தைகள் போல், துண்டு துண்டாய்ச் சிதறிப்போகும் கற்களைப்போல், காட்டாறுகளின் அடியில் சிதறிக் கிடக்கும் சிறுகற்களைப் போல்,

அவை யாவும் இளங்கோக்களே. (இருக் 10)

காலைப்பொழுதின் கதிர்களைப்போல வேள்விகளில் கனன்றெழுந்து, ஒளிமயமாய்த் திகழவேண்டுமென்றே ஆர்வத்தால் அணிகலன்கள் அணிந்து அவை ஒளிர்கின்றன.

à. மின்னும் ஈட்டிகளைக் கையிலெடுத்து ஆறுகள் போன்று

விரைந்து பரந்த விரிந்த தொலைவை அவை அளந்தெடுக்கின்றன. (இருக் 10).

நற்றமிழில் நால் வேதம்