பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

ஓ, நிலத்தாயே, நம்மை வெறுக்கிறவன்

k

நமக்கெதிராகச் செயல்படுகிறான். தன் சிந்தனையினாலும், படைகளினாலும் அச்சுறுத்துகிறான். முன்னைப் போலவே, ஓ, நிலத்தாயே அவனை வென்றிடுவாய். (அதர் 12)

உன்னிடமிருந்து தோன்றியவர்கள்.உன்மீதே நகர்ந்து செல்கின்றனர். அழியும் இந்த உயிரினங்களை அந்த இரண்டு கால், நான்கு கால் உயிரிகளை நீ தாங்கி நிற்கிறாய். ஓ, நிலமே, உன்னுடையவர்கள் ஐந்து மரபினைச் சேர்ந்தவர்கள். அழியும் இந்த மனிதர்களுக்கும் ஞாயிறு தான் உயரே கிளம்புகையில் அழியாத தன் ஒளியைச் சென்றடைகிறது. (அதர் 12)

எல்லா உயிரினங்களுமாக ஒருங்கிணைந்து வாழ்த்துகளை வழங்கட்டும். ஓ, அன்னை நிலமே, தேன் போன்ற பேச்சுத் திறனை எனக்கு அளித்திடுவாய். (அதர் 12)

விரிந்து பரந்தது உனது இருப்பிடம். உன் விரைவு, நடை, அதிர்வு, எவையும் சொல்லிலடங்கா. வல்லமை வாய்ந்த இறைவன் என்றும் உன்னைக் காத்தருள்கிறான். . ஓ, நிலத்தாயே, பொன் போன்ற பளபளப்புடன் எங்களை மிளிரச் செய்திடுவாய். எங்களை எவரும் வெறுத்திடாமலிருக்கட்டும். (அதர் 12)

நற்றமிழில் நால் வேதம்