பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O4

எல்லா வகையான மக்களும் நானிலத்தில் வாழ்கின்றனர்.

மழையுடன் கூட தானும் நனைகின்ற அவளுக்கு எங்கள் வணக்கங்கள். (அதர் 12)

புதையல்களைப் பல இடங்களில் பதுக்கி வைத்திருக்கிற மண்மகள் எனக்குச் செல்வம், மணிகள், பொன் ஆகியவற்றையும் அளிக்கட்டும். தாராள குணமுள்ள தாய் எங்களுக்குச் செல்வமளிக்கட்டும், அதனையும் அன்புடன் அளிக்கட்டும். (அதர் 12)

அரிமா, வேங்கை, சிறுத்தை, கழுதைப்புலி, ஓநாய், கரடி ஆகிய வன விலங்குகள் காட்டில்

சுற்றித் திரிகின்றன. ஓ, நிலத்தாயே இவற்றை என்னிடமிருந்து வெகு தொலைவிற்குத் துரத்திவிடு. (அதர் 12)

அன்னமும், கழுகும்,வெவ்வேறு வகையான் இரு கால் பறவைகள் நிலத்தில் உள்ளன. தும்பு தூசியை வாரி இறைக்கும் சுழற் காற்று, வளைந்துள்ள மரங்கள் இவை யாவும் நிலத்தில் உள்ளன. தீக் கனலைக் கக்கிக் கொண்டு நெருப்பு, பெருங்காற்றை முன்னும் பின்னுமாகக் தொடர்கிறது. இரவும், பகலும் நிலத்தில் அடங்கியுள்ளன. மழை நிலத்துக்கு மேல் கட்டியாய் விளங்குகிறது. வீடு தோறும் உள்ள எங்களை வாழ்த்துவிப்பாயாக.

(அதர் 12)

நற்றமிழில் நால் வேதம்