பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.19

பசுக்கள்

பசுக்கள் நம்மை அடைந்து நமக்கு நல்ல பேற்றினைத் தந்துள்ளன. அவை தமது கொட்டிலில் தங்கியிருந்து நமக்கு உகந்தவை யாயிருக்கட்டும். பலவண்ண, நிறங்களில் கன்றுகளின் தாயாக இங்கே வாழட்டும். வைகறைப் பொழுதுகளில் வழிபாட்டுக்குத் தேவையான பாலைத் தரட்டும். (இருக் 6)

இறைவன் வழிபடுபவரை நண்பனைப்போல் காத்து அவனுடன் நல்லுறவு கொள்கிறான். அவனுக்கு வெகுமதியளிக்கிறான்; அவனுக்கு உரியவற்றிலிருந்து எதையும் எடுத்துக் கொள்வதில்லை. அவனது செல்வத்தை மேலும் மேலும் செழிக்கச் செய்து தொண்டனைத் தகர்க்க முடியாத கோட்டையில் வைத்துக் காக்கிறான். (இருக் 6)

த.கோ - தி.யூரீ