பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}

à.

4O

சேர்ந்த புகழ்தற்குரிய விதியை, - முடிவு செய்யும் காலன் வையத்து உயிர்ப்பான, மடாரி சிலன் என்ற பெயர்களாலும் அழைக்கப் படுகிறான் கடவுள். (இருக் 1)

வள்ளன்மையுடைய இறைவனே, உனது பெருமை சொல்லில் அடங்காதது. நீ எடுத்துக் கொள்ளும் உருவங்களுக்கு ஒரு கணக்கில்லை. எண்ணற்றவற்றைக் கொண்ட எண்ணற்றவையும் நீ; நின்னிடத்திலே பல கோடிகளைக் கொண்டவன் நீ

- (அதர்13)

எவன் ஒருவன் என்றும் தனித்து விளங்குகிறானோ, அவனை நம்பு, இரண்டாமவனே இல்லை கடவுளில்.

(அதர் 13)

அனைத்துலகத்திற்கும் தலைவன் அவன். சிறந்துயர்ந்த ஆற்றலுள்ள இறைவன் எங்கிருந்து உதித்தான். (இருக் 10)

தூய திருத்தொண்டு யாவற்றிற்கும் ஏற்றவன் அவன் ஒருவனே. (இருக் 1)

இறைவன் ஒருவனே மானிடர்கள் யாவருக்கும் தலைவன் அங்கிங்கென்னாதபடி எங்கும் நிறைந்திருப்பவன். அவன் அவன் வகுக்கும் திருவறங்களை நாம் பின்பற்றுகிறோம். - (இருக் 8)

நற்றமிழில் நால் வேதம்