பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

- புகழ்வாய்ந்த பெருமான்

வடிவமற்றவன் அவன், வடிவமும் உருவமுமற்றஎல்லாப் பொருள்களிலும் குடியிருக்கிறான். குற்றம் குறை இல்ல தவன், எண்ணத்தில் அப்பழுக்கில்லாதவன், உடல் தொடர்பான செம்மையில் மேம்பட்டவன். தெய்வீக் கவிஞனாகிய அவன் ஒரு சிறப்பறிஞன், அமைதியும் இணக்கமும் இணைந்தவனாகத் தன் படைப்பைச் சீரான நிலையில் அமைத்துக் காக்கிறான். (யசுர் 10)

நம்மையும் நமது உற்றார் உறவினர்களையும் படைத்து ஒரு கட்டுக்குள் வைக்கிறான் அவன். ஆட்சிப் பகுதிகளையும், பல்வேறு இடங்களையும் அவற்றின் தொடக்க நிலையையும் நன்கறிந்தவன் அவன். அறிவொளி பெற்ற உள்ளுயிரின் உள்ளொஜி யாவும் அவன் அறிவொளி பெற்ற அனைவ்ரும் அடைந்து அழிவிலாப் பேரின்பம் பெறுகின்றனர் வீறுடைய இலக்காகிய வீடு பேற்றை அடைகின்றனர்.

- (யசுர் 31)

நற்றமிழில் நால் வேதம்