பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

எங்குமிருப்பவன் அவன், ஆற்றல் வாய்ந்தவன் அவனே. நிலம், இடைவெளி, வானகம் ஆகிய மூவுலகங்களையும் ஆளுபவன் அவன். அவன் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் கமுக்கமானது, r மாந்த இனம் புரிந்து கொள்ள முடியாதது.

..(அதர் 7)

வெல்ல முடியாத புடவியைக் காப்பவன்.அவனே.

நிலம், வான்வெளி, விண்ணகம் ஆகிய

மூவுலகங்களையும் படைத்தவன் அவனே.

உலகின் திருநிலையை நிலைநிறுத்துகிற

செயல்பாடுகள் அனைத்தையும் கட்டிக்காப்பவன் அவனே.

(анто 1670)

எங்கும் அவனைத் தேடு, எல்லாமே அவன் பரப்புக்குள் அடங்குபவை; அனைத்தும் அறிந்தவன் அவன், மெய்யறிவின் பெட்டகம் அவன், நடக்கவேண்டியவற்றைத் தீர்மானிப்பவன் அவன். அவன் ஒருவனே நமக்குப் புகலிடம். அனைத்து ஆற்றல்களையும் பெற்றவன் அவன். நமது விருப்பங்களை நிறைவேற்றி வைப்பவன் அவன். நமது ஊட்டம், வீறியம், அறிவு, வன்மை ஆகியவற்றிற் கெல்லாம் உறைவிடமாய் இருப்பவனும்

அவன்தான். (இருக் 1)

எங்கும் நிறைந்தவன் அவன், என்றும் மாறாத மேலானவன்,

நற்றமிழில் நால் வேதம்