பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீதற விளங்கிய திகிரியோனே” என நற்றினையிலும், 'படிவ உண்டிப் பார்ப்பன மகனே எழுதாக் கற்பின் நின்சொல் உள்ளும் எனக்

குறுந்தொகையிலும் ஆரிய வேதங்களைப் பற்றிய செய்திகள் வருகின்றன.

காப்பிய காலத்திலிருந்து கவிஞர் பாரதியார் வரை வேதங்களைப் பற்றிக் குறிக்காதவர்களே இல்லை. சமயவாணர் கள் பலர் வேதங்களை முற்றும் அறிந்ததில்லை என்பதை வேதங்களைப் படித்தபோதுதான் தெரிகிறது, இருந்தும் வேதங்களை வைணவ, சைவ சமயங்கள் பொதுவாக மறை, மறைமொழி, எழுதாக் கிளவி எனக் குறிப்பிடாமல்

இருப்பதில்லை. இது தனி ஆய்வுக்குரியது.

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் இயற்கை நெறிக்காலம். தெய்வம் - கடவுள் ஆகிய சொற்கள் ஆணாகவோ, பெண்ணாகவோ உருவகப்படுத்தாது. தென்னக மக்கள் கற்பனையில் தோயாதிருந்த காலம் . அக் காலத்தே தான் ஆரியர் தம் நான்கு வேதங்களைக் கூறி 'வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம் என்ற கருத்தினை 'அறம் பொருள் இன்பம், என்ற வாழ்விருப்பைச் சிதைத்தனர். இதுவும் தனி வரலாறு. -

ஆரிய வேதங்களான இருக்கு,எசுர்,சாமம்,அதர்வம் நான்கும் கி.மு. 1500 லிருந்து கி.மு.200-க்குள் வாய்மொழிப் பாடல்களாகப் பலரால் பாடப்பட்டவையாகும். நான்கு வேதங்களில் இருக்கு வேதந்தான் முதல் தொகுப்பாகும். 1028 பாசுரங்களைக் கொண்டது. பத்து மண்டலங்களாப்