பக்கம்:நற்றிணை-2.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 நற்றிணை தெளிவுர்ை தெளிந்த இனிய பேச்சு. 'அரிது புணர் இன்னுயிர்' என்றது, உயிரின் சிறப்புப்பற்றி, அது கழியின் மீளக் கொணர்ந்து புணர்த்தல் ஏலாமையின் இப்படிக் கூறினுள். அதனைக் கவர்தல் மிகக் கொடுமை என்பாள் வெளவிய நீ என்று பழி கூறினன். அணங்குதல்-தாக்கி வருத்துதல். விளக்கம் : தலைவிக்கும் தலைவனுக்கும் முன்னரே ஏற்பட்டிருந்த உறவினைத் தான் அறிந்தமை புலப்படத் தான் ஏதும் அறியாதாள் போலக்கொண்டு தோழி இப்படி உரைக்கின்ருள். கானற் சோலைக்கண் அவன் த்ொழு நின்றமை கூறினுள், அவன் தலைவியைக் காண விரும்பியே அவ்விடத்துக் காத்து நின்றதனைத் தான் உணர்ந்ததனைக் கூறினள். அவன் செல்வக் குறைபாடின்மை கூறுவாள், தேர்ப்புரவி தாங்கி’ என்றனள். அவன் காதன்மை மிகுதி கூறுவாள் 'தொழுது நின்றது’ கூறினள். அவளுலே தலைவியும் மயங்கியதைத் தான் உணர்ந்ததைக் கூறுவாள், "தான் நம் அணங்குதல் அறியான்’ என்ருள். - பெருங்கடற் சேர்ப்பன் இவ்வாறு நம்மைக் கண்டு வியைதும், தொழுததும் நகையாடுதற்குரிய செயலல்லவோ என்று களிப்போடு கூறுகின்ருள். இவற்ருல் தலைவிக்குத் தோன்றும் மெய்ப்பாடுகளை அறிந்து அவளைத் தலைவைேடு சேர்த்தல் இதன் பயனுகும். 246. வருதும் என்ற பருவம்! பாடியவர் : காப்பியஞ் சேந்தனர். திணை : பாலை. துறை : பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறீ இயது. ((து-வி.) பிரிந்துறை வாழ்விலே மெலிவுற்ற தலைமகளை நோக்கி, 'அவன் இன்னே வருகுவன்’ என்று வலியுறுத்திக் கூறித் தெளிவிக்க முயலுகின்ற தோழியின் கூற்ருக அமைந்த செய்யுள் இது. பிரிவுத் துயரத்தின் மிகுதியாலே பெரிதும் நொந்து நலிவும் மெலிவும் அடைந்த தலைவியின் மனம் பெரிதும் சோர்ந்த போகின்றது. அவளுக்குக் கார்காலத்து வரவைக் காட்டியபடி தோழி இவ்வாறு தேறுதல் உரைப்பதாகக் கொள்க.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/106&oldid=774097" இலிருந்து மீள்விக்கப்பட்டது