பக்கம்:நற்றிணை-2.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 நற்றினை தெளிவுரை மகிழ்கின்ருன். அவனை எடுத்து அணைத்தபடியே தலைவியின் நினைவெழத் தலைவிபாற் செல்கின்ருன். அப்போதும் அவள் 'நீர் யாரோ?' என்று கேட்க, அதனைச் சொல்லித் தன் பாணனுடன் நகையர்டுவதாக அமைந்த செய்யுள் இது.) நகுகம் வாராய் பான! பகுவாய் அரிபெய் கிண்கினியார்ப்பத் தெருவில் தேர்நடை பயிற்றுந் தேமொழிப் புதல்வன் பூநாறு செவ்வாய் சிதைத்த சாந்தமொடு காமர் நெஞ்சந் துரப்ப பாந்தன் 5 முயங்கல் விருப்பமொடு குறுகினே மாகப் பிறைவனப் புற்ற மாசறு திருநுதல் காறிரும் கதுப்பினெம் காதலி வேறுணர்ந்து வெரூஉமான் பிணையின் ஒரீஇ யாரை யோவென் றிகந்துகின்றதுவே! 10 தெளிவுரை: பாணனே! நாம் நகையாடிக் களிக்கலாம் வருவாயாக உள்ளே பரல்கள் இடப் பெற்றதும் பிளந்த வாயினை உடையதுமான கிண்கிணி ஆரவாரிக்கத் தெரு விலே சிறுதேர் உருட்டி நடைபயின்று கொண்டிருந்தனன், இனிய மொழியினைப் பேசும் எம் புதல்வன். செவ்வாம்பலின் மல்ரைப்போலத் தோன்றும் சிவந்த அவன் வாயின் நீர்ா னது ஒழுகுதலாலே சிதைந்த சந்தனப் பூச்சோடு, யான் இல்லத்துள் அவனை எடுத்து அணைத்தபடியே சென்றேன். விருப்பம் கொண்ட என் நெஞ்சமானது என்னைத் துர்ண்டிச் செலுத்துதலாலே யானும் தலைவியை முயங்குதல் என்னும் விருப்பத்தோடே அவளைச் சென்றும் நெருங்கினேன். பிறையது வனப்பைக்கொண்ட குற்றமற்ற அழகிய நெற்றி யையும், மணங்கமழும் கரிய கூந்தலையும் கொண்டாளான என் காதலியானவள், என் வருகையைப்பற்றி வேருகக் கருதிக் கொண்டாள். அஞ்சி அகலுகின்ற மான் பிணை யினைப்போல என்னைவிட்டு ஒதுங்கிச் சென்று நின்றபடி, "என் அருகே நெருங்கி வருவதற்கு நீதான் யாவனே? என்ற படியே வினவலையும் செய்தனள். அதனை எண்ணி யாம் நகையாடி மகிழலாம், வருவாயாக! "சொற்பொருள் : பகுவாய் பிளப்புண்ட மூட்டுவாய்; பெரிய வாயும் ஆம்; இதனைத் தவளைவாய்க் கிண்கிணி என அதன் மூட்டுவாய் அமைப்பையொட்டிக் கூறுதலும் உண்டு. அரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/114&oldid=774106" இலிருந்து மீள்விக்கப்பட்டது