பக்கம்:நற்றிணை-2.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீற்றின தெளிவுரை 113 சொற்பொருள் : கடும்பாட்டு-கடுமையான வெருட்டும் பாட்டு. பிணிமுதல் அரைய-பிணிப்புண்ட அடிப்பகுதியை யுடைய; இது கன்றுகள் பல்கிப் பிணிப்புண்டிருத்தலையும், கா ட் டு க் கொடிகளாலே பிணிப்புண்டிருத்தலையும் உணர்த்தும். நயத்தல்-விரும்பல். அளிபேர் அன்பு-தலையளி செய்தலாய பேரன்பு; இரக்கம்கொண்டு செய்த பேரன்பும் ஆம். புறங்காத்தல் - பாதுகாத்தல். தளிர் - மாந்தளிர். பலிபெறு கடவுள்-பலியேற்று உண்ணும் கடவுள்; முருகு. கலி-ஆரவாரம். தொடங்குநிலை-தொடங்கும் பொழுதிலே. கிளர்ந்து-நிமிர்ந்து நின்று. விளக்கம் : களவுப் புணர்ச்சியினலே என் பழைய மேனிநிறம் மாறுபட்டத்தறிந்த அன்னையும் தமரும், முருகு அணங்கிற்றுப் போலும் என்று கருதினர்; என்னைக் குறித்து வெறியயர்தலையும் மேற்கொள்வர். அக் காலத்து யானும் இற்செறிப்பு உறுதலை அடைவேன். ஆதலின்,நின் கதிர்களைப் பறவையினம் கவர்ந்து போகும். ஆகவே, நீயும்.கதிர் முற்றி விளைதலைச் சற்றுக் காலம் நீட்டிப்பாயாக’ என்கின்ருள். இதனைக் கேட்கின்ற தலைவன், அவளைப் பிரிந்து வாழற் கியலாத தன் காதன் மிகுதியாலே தானும் உளஞ்செலுத்தப். பட்டாய்ை, அவளே மணந்து கோடற்கு உரிய செயல்களை நாடுபவன் ஆவன் என்பதாம். 'தினை விளையுங் காலம் மணவினைக்கு உரிய கால மாதலின், அதனைத் தலைவனும் நினையாது நீட்டித்தவகை இருத்தலின், தினையே நீயும் நின் கதிர்முற்றி விளைதலைச் சிற்று அதுவரை நீட்டிப்பாயாக'என்றனளும் ஆம். இன்றேல், அவனைப் பெருத யாம் நலிவெய்தி அழிவெய்தலும் நேரும் என்றதும் ஆம். அவன்தான் காலத்தை மறந்தாளுயினன்; ஆதலினலே, நீ கதிர்முற்றுங் காலத்தையேனும் நீட்டிப் பாயாக என்பது தலைவியின் துயரத்தை நன்கு காட்டும். உள்ளுறை : அருவியொலி நீங்காதிருக்கும் இடத்தருகே யுள்ள வாழையின் கனியை, அவ் வொலிக்கு அஞ்சாதே சென்று மந்தி கவர்ந்து உண்ணும் அஃதேபோல, வெறியயர்தலிலே தமர் ஈடுபட்டு ஆரவாரித்திருச்கும் காலத்துத் தலைவி தலைவன்பால் வந்து களவிற் சேர்ந்து இன்புறலும் வாய்க்கும் என்றதாம். இதுதான் எளிதா காமையின் வரைந்து கோடலே செய்ற்குரியது என்று குறிப்பாக உரைத்ததும் ஆம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/115&oldid=774107" இலிருந்து மீள்விக்கப்பட்டது