பக்கம்:நற்றிணை-2.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை - (17 சொற்களைக் கேளாயுமாயின. இனியேனும் விரைந்து அவளே வரைந்துகொண்டு வாழ்தலுக்காவனவாய முயற்சி களை விரையச் செய்தலை நினைவாயாக! சொற்பொருள் : பதி - கூட்டிடம்; தங்குமிடம். பள்ளி யானை - படுக்கையிலே கிடந்த யானை. கழிபட வருந்திய - மிகுதிப்பட வருத்தமுற்ற. எவ்வம்-துன்பம்; அது காமமிகுதி யாலே உண்டாயது. பெரிதழிந்து - பெரிதும் உளமழிந்து. உள்ளினும் - நினைப்பினும், நினைத்தலாவது, தலைவனைக் களவுக் குறியிடஞ் சென்று சேர்தலை. பனிக்கும்-நடுங்கும். இசை - முழக்கம். மாரி - மழை மேகங்கள். முற்றிய - இருண்டு சூழ்ந்த. கவின்-அழகு. விளக்கம் : உள்ளினும் பனிக்கும்’ என்றது, இரவுக் குறி நேர்தல் ஒருகால் வாயாதாகும் எனின், அதன் பொருட்டு நீவரும் வழியின் ஏதங் கருதியும், நினக்குத் தமராலே ஏற்படக்கூடிய துயரம் கருதியும் நடுங்குவா ளாயினள் என்றதாம். களவு முட்டுப்பட்ட விடத்துக் கூடி யிருப்பாரையும், கூடியிருக்கும் புள்ளினத்தையும் காணும்போதெல்லாம் தலைவன் பெரிதும் உளமழிந்து சோர்தலேயன்றி, வரைந்து வந்து மணத்தலைப் பற்றி யாதும் நினைத்திலன் என்பதாம். * * * * பறம்புமலையிலே வாழ்ந்த பாரிவள்ளல் வருவார்க்குக் கள்ளினை மிகுதியாகத் தந்து களிப்பான் என்பதனை, ஒருசார் அருவி யார்ப்ப வாக்கவுக்க தேக்கட் டேறல், கல்லலைத் தொழுகு மன்னே’எனக் கபிலர் புறநானூற்றிலும் கூறுவர் (புறம். 115). மூவேந்தராலும் கொள்ளற்கு அரிதான பெருங்காப் புடன் திகழ்ந்தது பாரியின் பறம்பு. தலைவியையும் அருங் .காப்பில் இட்டிருந்த நிலைமைக்கு அந்தப் பறம்புக் காப்பின் வன்மையை உவமை கூறினர். எனவ கேளாய்” என்றது. நின் செயலிழந்த தன்மை யாலே, அவள்தான் உயிரழிதலும் கூடும் என்றதாம். 'பள்ளி யானையின் வெய்ய உயிரினை’ என்றது, அதுதான் சோம்பிக் கிடத்தலைப் போல, நீயும் நின் ஆண்மையும் அறப் பண்பும் மறந்தாயாய், வருந்துதல் செயலாகக் மட்டுமே கொள்வாயாயினை என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/119&oldid=774111" இலிருந்து மீள்விக்கப்பட்டது