பக்கம்:நற்றிணை-2.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 . நற்றினை தெளிவுரை 255. இன்றவர் வாராராயின் நன்று பாடியவர் : ஆலம்பேரி சாத்தனர். திணை : குறிஞ்சி. துறை : ஆறுபார்த் துற்றது. [ (து. வி.) தன்னைத் தலைவன் வரைந்து மணந்து கொண்டு சென்று, தன்னுடனே கூடி இல்வாழ்க்கை நடத்து தலைப் பெரிதும் விரும்புகின்ருள் தலைவி. அதனைத் தலைவு னுக்குச் சொல்ல_விரும்புகின்றவள், அவன் வந்து ஒருசார் நிற்பதறிந்து, தோழிக்குச் சொல்வாளேபோல, அவன் கடந்து வரும் வழியின் கொடுமைக்குத் தான் அஞ்சுவதாகக் கூறுகின்ருள். இவ்வாறு தலைவி சொல்வதுபோல அமைந்த ச்ெய்யுள் இது.) கழுதுகால் கிளர ஊர்மடிந் தன்றே உருகெழு மரபின் குறிஞ்சி பாடிக் கடியுடை வியனகர்க் கானவர் துஞ்சார் வயக்களிறு பொருத வாள்வரி வேங்கை கன்முகைச் சிலம்பிற் குழுஉ மன்னே '6 மென்தோள் கெகிழ்ந்துகாம் வருந்தினும், இன்றவர் வாரா ராயினே கன்றுமன் தில்ல உயர்வரை யடுக்கத் தொளிறுபு மின்னிப் பெயல்கால் மயங்கிய பொழுதுகழி பாள்ை திருமணி அரவுத்தேர்ந் துழல 10 உருமுச்சிவந் தெறியும் ஓங்குவரை யாறே! தெளிவுரை : பேயினங்கள் காற்ருேடும் கலந்தவையாய் இயங்குகின்றன; ஊரவர் அனைவரும் செயலொழிந்து உறங்கியிருக்கின்றனர்; கேட்போருக்கு அச்சத்தைத் தருதலை யுடைய குறிஞ்சிப் பண்ணேப் பாடியபடியே, காவல் மேற் கொண்டிருக்கும் க் ா ன வ ர் க ளு ம் துயில்வாரல்லர். வலிமிகுந்த களிற்றினேடும் போரிட்டதான வாள்போலுங் கோடுகளைக் கொண்ட வேங்கைப் புலியானது, மலையிடத்தே யுள்ள கல்முழைஞ்சினுட் கிடந்ததாய் முழக்கமிடுகின்றது! ஐயகோ உயர்ந்த மலைப் பக்கத்தே விளக்கமோடே மின்னலைச் செய்தபடியே காற்றும் மழையுமாகக் கலந்து பெய்த இரவுப்பொழுது கழிந்துபோன நடுயாமத்திலே, இடிமுழக்கத்திற்கு அஞ்சியபோதும் தான் இழந்துவிட்ட மணியைத் தேடியபடி பாம்பினம் வருந்தியிருக்க, அவற்றை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/124&oldid=774117" இலிருந்து மீள்விக்கப்பட்டது