பக்கம்:நற்றிணை-2.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 . நற்றிணை தெளிவுரை மேற்கோள் : இரவுக்குறி வரலால் தலைவி வருந்துவள் என்றது என இச்செய்யுளை, "நாற்றமும் தோற்ற்மும்’ (தொல். பொருள் 114) என்னும் சூத்திரத்து, ஆற்றது தீமை யறிவுறு கலக்கமும் என்னும் பகுதியின் உரை யிடத்தே ஆசிரியர் நச்சினர்கினியர் காட்டுவர். 256. கார்ப்பெயல் செய்த காமர்மால பாடியவர் : பாலைபாடிய பெருங்கடுங்கோ. தின : பால. துறை: பொருள்வயிற் பிரிந்தான் என்று ஆற்ருளாகிய தலைமகளைத் தலைமகன் ஆற்றியது. - ((து.வி.) தல்வன் பொருள் தேடிவருதலைக் கருதினன்; தன்னைப் பிரிந்து போதலையும் எண்ணிஞ்ன் எனக் கலங்கி யழிந்தனள் தலைவி. அவளுக்கு, அவன், தான் போகப் போவ தில்லை என தெளிவிப்பதுபோல அமைந்த செய்யுள் இது.) நீயே, பாடல் சான்ற பழிதபு சீறடிப் பல்குறப் பெருநலத் தமர்த்த கண்ணே! காடே, நிழல்கவின் இழந்த அழல்கவிர் மரத்த புலம்புவீற் றிருந்து நலஞ்சிதைந் தனவே; இங்கிலே தவிர்ந்தனம் செலவே, வைந்நுதிக் 5 களவுடன் கமழப் பிடவுத்தளை அவிழக் கார்ப்பெயல் செய்த காமர் மாலை மடப்பிணை தpஇய மாவெருத் திரலை காழ்கொள் வேலத் தாழ்கிளே பயந்த கண்கவர் வரிகிழல் வதியும் 10 தண்படு கானமும் தவிர்ந்தனஞ் செலவே! தெளிவுரை நீதான், புதழ்மைந்த, குற்றந்தீர்ந்த சிற்றடிகளை உடையை பல்கிய பெரிதான_நலங்களமைந்த அமர்த்த கண்களையும் உடையை! காடோ, நிழலாலே உண்டாகின்ற அழகினை இழந்து போனதும், வேனிலது வெம்மையாலே கரிந்துபோய்க் கிடப்பதுமான மரங்களே உடையது. மாவும் பிறவும் வழங்குதலற்றுத் தனிமை நிலை பெற்றதாய்த் தன் பொலிவழிந்து போயுமிருக்கின்றது. இந் நில்ைன்ய்க் கருதினமாதலின், நின்னையும் உடன்கொண்டு போதற்கு இயலாமையில்ை, யாமும். எம் செலவினைக் கோடைக்காலத்தே கைவிட்டனம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/126&oldid=774119" இலிருந்து மீள்விக்கப்பட்டது